பெற்ற தாயிற்கு வணக்கம்,
கற்ற தமிழுக்கு வணக்கம்.....
என் இனிய தம்பி தங்கைகளே, அனைவரும் நலமா?
இணையம் வழி அல்லது இணைய ஊடாக எவ்வாறு ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம், பயனாக்கிக் கொண்டு மாணவர்கள் தங்களின் அறிவியல் திறனை வளர்க்க இக்களம் ஓர் அடித்தளமாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
எதிர்வரும் ஆகஸ்டு திங்களன்று ஆரம்பித்து உங்களுடைய அண்ணன் உங்களுக்காக அறிவியல் தேர்விற்கு சில உதாரண கேள்வியும் பதிலும் பதிவேற்றவுள்ளேன். அக்கேள்விகளைப் பயின்று நல்முறையில் பயன்படுத்தி அறிவியலில் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்று நன்மையடையுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் அண்ணனைக் கேளுங்கள்.
இந்த நல்லெண்ணத்தை எனக்குத் தூண்டிய டத்தோ ஸ்ரீ குருஜி அவர்களுக்கும் டத்தின் ஸ்ரீ ஜி அவர்களுக்கும் நன்றி....
யோக ஞான சித்தர் ஓம் ஸ்ரீ இராஜ யோக குரு சரணம்
0 comments:
Post a Comment